top of page

About Us

Oshawa Christian Worship Centre (OCWC)

தேவனுடைய கிருபையால் 2023ம் ஆண்டு ஒஷ்வா பிரதேசத்தில் தேவநாமத்தை மகிமைப்படுத்தும்படியாக மிகுந்த ஜெபத்துடனும் பிரயாசத்துடனும் தமிழ்த் திருச்சபை (ஒஷ்வா கிறிஸ்தவ ஆராதனை ஸ்தலம்) ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.,


ஆதியா 28:12-19
12. அங்கே அவன் ஒரு சொப்பனங்கண்டான்; இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள்.
13. அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்.
14. உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும்; நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.
15. நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.
16. யாக்கோபு நித்திரை தெளிந்து விழித்தபோது: மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேன் என்றான்.
17. அவன் பயந்து, இந்த ஸ்தலம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல் என்றான். 
18. அதிகாலையிலே யாக்கோபு எழுந்து, தன் தலையின்கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி, அதின்மேல் எண்ணெய் வார்த்து,
19. அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல் என்று பேரிட்டான்; அதற்கு முன்னே அவ்வூருக்கு லூஸ் என்னும் பேர் இருந்தது.

பெத்தேல் (தேவனுடைய வீடு) என்று வாக்குத்தத்தம் பண்ணின தேவன் ஆவியானவரின் அசைவினால் கர்த்தர்தாமே சபையை ஜனங்களுக்கு அடையாளம் காட்டி, கட்டி எழுப்பினதும் அல்லாமல் தேவன் விளைச்சலையும் கட்டளையிட்டுக்கொண்டிருக்கிறார்.

“உன் வெளிச்சத்தினிடத்திற்கு ஜாதிகளும் உதிக்கிற உன்
ஒளியினிடத்திற்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள” ஏசாயா 60:03
என்ற பிரகாரமாக மார்க்கம் கிறிஸ்தவ ஆராதனை ஸ்தலத்துடன்; இணைந்து சபை எழுந்து பிரகாசிக்கவும் தேவனின் நாமம் மகிமையடையும்படியாகவும் கிருபை செய்தார்.
 

360_F_745212778_WAeAp6VuWq8ZI2jJhNjqeyHgHAbSg3te.jpg

Our Vision

  • இயேசுவை அறிந்து கொள்ளுங்கள்
     

  • இயேசுவை ருசித்து பாருங்கள்

  • இயேசுவை அறிவியுங்கள்
     

  • இயேசுவுக்கு சீடராகுங்கள்

bottom of page